வங்கிக்கணக்கில் ரூ.2,000 - பிரதமர் மோடி அதிரடி!

by Editor / 14-05-2021 09:11:37am
வங்கிக்கணக்கில் ரூ.2,000 - பிரதமர் மோடி அதிரடி!

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் 8ஆவது தவணையாக ரூ.19 ஆயிரம் கோடி இன்று காலை பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார்.

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ரூ.6 ஆயிரம் அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். அந்த வகையில் இதுவரை ரூ.1.15 லட்சம் கோடி பணபரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 9.5 கோடி விவசாய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் கிசான் திட்டத்தின் 8ஆவது தவணையாக ரூ.19,000 கோடியை பிரதமர் இன்று காலை விடுவிக்க உள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர், நாட்டிலுள்ள கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது என குறிப்பிட்டுள்ளார். காலை 11 மணியளவில் காணொலி காட்சி வழியே பிரதமர் இதுகுறித்து விவசாயிகளுடன் பேச உள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று வேகமெடுத்து வரும் சூழலில் பிரதமரை, மத்திய அரசை காணவில்லை என்று பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் தான் தமிழகத்தில் தகுதி இல்லாத பலரும் பணம் பெற்றது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து அவர்களிடம் கொடுக்கப்பட்ட பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டது.

 

Tags :

Share via