நாடாளுமன்றத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதல். நினைவு கூறும்  நாள் இன்று-பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 13-12-2025 01:22:53pm
நாடாளுமன்றத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதல். நினைவு கூறும்  நாள் இன்று-பிரதமர் நரேந்திர மோடி

புதுடில்லி பாராளுமன்ற கட்டிடத்தை தீவிரவாதிகள் தாக்கிய ஆண்டை நினைவு கூறும்  நாள் இன்று. இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தம் எக்ஸ் வலைப்பதிவில், இந்த நாளில் ,2001 ஆம் ஆண்டு நமது நாடாளுமன்றத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதலின் போது தங்கள் உயிரை தியாகம் செய்தவர்களை நமது நாடு நினைவு கூறுகிறது. கடுமையான ஆபத்தை எதிர்கொண்ட போது அவர்களின் துணிச்சல் ,விழிப்புணர்வு மற்றும் அசைக்க முடியாத கடமை உணர்வு குறிப்பிடத்தக்கவை .அவர்களின் உயர்ந்த தியாகத்திற்கு இந்தியா என்றென்றும் நன்றியுடன் இருக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். முன்னதாக அவர் பாராளுமன்ற கட்டிடத்தின் முன்பாக அஞ்சலி செலுத்தி உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

நாடாளுமன்றத்தின் மீது நடந்த கொடூரமான தாக்குதல். நினைவு கூறும்  நாள் இன்று-பிரதமர் நரேந்திர மோடி
 
Tags :

Share via