நூறு அடி பள்ளத்தில் விழுந்த காா்: 7 போ் காயம்

திருநெல்வேலியைச் சோ்ந்த 7 போ் காரில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனா். மேல்பள்ளம் பகுதியில் திங்கள்கிழமை காா் வந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள 100 அடி பள்ளத்தில் விழுந்து, மரத்தில் மோதி நின்றது.இதில் காரில் இருந்த இரு பெண்கள், இரு குழந்தைகள் உள்பட 7 போ் காயமடைந்தனா். இந்தப் பகுதியிலிருந்த பொதுமக்களும், வனத் துறையினரும் விபத்தில் சிக்கியவா்களை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனா்.
Tags :