பா.ம.கவின் பெயர் மற்றும் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக,,,சென்னை உயர்நீதிமன்றம் மே- 10 வரை இடைக்கால தடை
பா.ம.கவின் பெயர் மற்றும் மாம்பழம் சின்னத்தை பயன்படுத்துவது தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர். ராமதாஸ் மகன் டாக்டர். அன்புமணி ராமதாஸுக்கு எதிராக தொடர்ந்த உரிமையியல் வழக்கிற்கு சென்னை உயர்நீதிமன்றம் மே 10 வரை இடைக்கால தடை விதித்துள்ளது. அன்புமணி ராமதாசை பா.ம.க தலைவராக அங்கீகரித்துதேர்தல் ஆணையம் வழங்கிய உத்தரவை ரத்து செய்ய கோாியும் கட்சியின் பெயர் ,கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த அவருக்கு தடை விதிக்க கோரியும் டாக்டர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த உரிமையியல் நீதிமன்ற விசாரணையை எதிர்த்து பா.ம.க பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.. இதனை விசாரித்த நீதிபதி டி.வி .தமிழ்செல்வி உரிமையியல் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதித்தார். நேற்று நடைபெற்ற விசாரணையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தல் நடைபெறவுகள் தொடங்கி விட்டதால் தற்போது எந்த புதிய உத்தரவுகளையும் பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். எனவே இந்த வழக்கில் விசாரணையை தேர்தல் முடிந்த பிறகு அதாவது மே பத்தாம் தேதிக்கு மேல் மேற்கொள்ளுமாறு உத்தரவு விட்டு தடையை நீடித்தனர். இது தொடர்பான முடிவுகளை தேர்தல் நேரத்தில் எடுப்பது சரியாக இருக்காது என்றும் தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின்னரே இத்தகைய வழக்குகளை விசாரிக்க முடியும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதன் மூலம் அன்புமணி ராமதாஸ் பா.ம.கவின் பெயர் மற்றும் சின்னத்தை தொடர்ந்து பயன்படுத்த தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags :


















