14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் நகைகள் பறிமுதல்.
விருதுநகர் சூலக்கரை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 14 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் வைரம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இருந்து கன்னியாகுமாரி நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு தனியார் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அந்த வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட நகைகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என்பது சோதனைகள் தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் அனைத்தும் தற்போது கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்ட உள்ளன. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும் இது குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டு மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :













.jpg)
.jpg)

.jpg)

