ஆணவமாக பேசியவர்களுக்கு ஜனநாயகம் பாடம் கற்பித்துள்ளது கார்த்தி சிதம்பரம்.

காரைக்குடி அழகப்பச் செட்டியார் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் சிவகங்கை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்துக்கு வெற்றிச் சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஆஷா அஜித் வழங்கினர். பின்னர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:தமிழகம், புதுச்சேரியில் 40 இடங்களில் பெற்ற வெற்றியை,மு.க.ஸ்டாலின் வெற்றியாக கருதுகிறேன். அவருக்கு நன்றியை தெரித்து கொள்கிறேன். மேலும் காங்கிரஸார், கூட்டணி கட்சியினர், வாக்காளர்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளை விட தொகுதிக்கு
இன்னும் முனைப்பாக உழைப்பேன். 400 தொகுதிகளை பெறுவோம் என்று ஆனவமாக பேசியவர்களுக்கு ஜனநாயகம் பாடம் கற்பித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அமைச்சர்கள் ரெகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், தமிழரசி எம் எல் ஏ ஆகியோர் உடனிருந்தனர்.
Tags : கார்த்தி சிதம்பரம்.