முக அடையாளத்தை வைத்து  டிஜிட்டல் முறையில்  வங்கிக் கணக்கு தொடங்கும் வசதி 

by Editor / 05-08-2021 07:26:11pm
முக அடையாளத்தை வைத்து  டிஜிட்டல் முறையில்  வங்கிக் கணக்கு தொடங்கும் வசதி 


அபுதாபி இஸ்லாமிய வங்கி தனது புதிய டிஜிட்டல் சேவையை, ஐக்கிய அரபு அமீரக உள்துறை அமைச்சகத்துடன் கூட்டு சேர்ந்து, அமைச்சின் முக அங்கீகார முறையைப் பயன்படுத்தி கணக்குத் திறப்பவரின் அடையாள விவரங்களைச் சரிபார்க்க உதவுகிறது.
இதன் மூலம், மோசடி மற்றும் பிற அடையாள திருட்டுக்கு எதிரான பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உடனடி மற்றும் பாதுகாப்பான கணக்கு துவக்கத்திற்கு முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தும் முதல் ஐக்கிய அரபு அமீரக வங்கியாக திகழ்கிறது.


அபுதாபி இஸ்லாமிய வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அமீரக உள்துறை அமைச்சகத்தின் முக அடையாளத்தை சரிபார்க்கும் வசதியை டிஜிட்டல் முறையில் பயன்படுத்தி, அபுதாபி இஸ்லாமிய வங்கி பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. பொதுமக்கள் வங்கிக் கணக்கை தொடங்க வங்கிகளுக்கு நேரடியாக வர வேண்டிய கட்டாயமில்லை. தங்களது வீட்டில் இருந்தபடியே அல்லது அலுவலகத்தில் இருந்தபடியே வங்கிக் கணக்கை தொடங்கி கொள்ளலாம். இத்தகைய வசதியை அமீரகத்தில் அறிமுகம் செய்துள்ள முதல் வங்கி என்ற பெருமையை அபுதாபி இஸ்லாமிய வங்கி பெற்றுள்ளது.


இந்த வசதியின் மூலம் புதிதாக வங்கிக் கணக்கை தொடங்குபவர்களின் பாஸ்போர்ட், அமீரக அடையாள அட்டை உள்ளிட்டவை சரிபார்க்கப்படுவதுடன், அவரது முக அடையாளமும் உறுதி செய்யப்படும். இந்த நடைமுறையின் மூலம் 5 நிமிடத்தில் புதிய வங்கிக் கணக்கை தொடங்க முடியும். இந்த வங்கிக் கணக்கை தொடங்குவதற்கு பொதுமக்கள் இந்த வங்கியின் செயலியை தங்களது செல் போன் அல்லது ஸ்மார்ட் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via