கஞ்சா கடத்திய தம்பதி கைது பணம், கஞ்சா பறிமுதல்

by Staff / 08-09-2023 12:17:01pm
கஞ்சா கடத்திய தம்பதி கைது பணம், கஞ்சா பறிமுதல்

மதுரை கரிமேடு போலீசார் நேற்று முன்தினம் குரு தியேட்டர் பகுதியில் ரோந்தின் போது சந்தேகப்படும் படியாக ஆட்டோவுடன் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். புதுஜெயில் ரோடு முரட்டன்பத்திரி மாறன் 54 மனைவி நீலாவதி 42 என தெரிந்தது அவர்கள் வைத்திருந்த கைப்பையை போலீசார் சோதித்த போது அதில் 2 கிலோ கஞ்சா, ரூ 31, 000 இருந்தது அவைகளை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
 

 

Tags :

Share via