வயநாடு நிலச்சரிவு தொடர்பாக  சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை 9656938689, 8086010833 எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

by Editor / 30-07-2024 08:14:57am
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக  சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை 9656938689, 8086010833 எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியைச் சேர்ந்த சூழல்மலை பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவில் பெரிய பெரிய பாறைகள் அடித்து வரப்பட்டுள்ளன மேலும் கரடு முரடான பாதைகளாக அந்த பாதைகள் மழை நீரால் நிலச்சரிவில் சிக்கி சின்னா பின்னம் ஆகி உள்ளது தொடர்ந்து மீட்புப் பணிகளில் தோய்வும் ஏற்பட்டுள்ளது நிலச்சரிவு ஏற்பட்டு தண்ணீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி வருகின்றன மேலும் மரங்களும் மர கிளைகளும் அடித்து வரப்பட்டுள்ளதால் ஆங்காங்கே மர கிளைகள் குவியல் குவியலாக காட்சியளிக்கின்றன நேற்று இரவு முதல் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பெரும் சவாலாக மீட்பு பணி அமைந்துள்ளது இருப்பினும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு முகாமிட்டு வீடுகளில் இசக்கி டார்ச்சுகளை அடித்து தங்களை காப்பாற்ற வருமாறு அபாய குரல் எழுப்பி வருகின்றனர் அவர்களை மீட்கும்படியிலும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் இந்த நிலச்சரிவில் பள்ளிகளும் வீடுகளும் ஏராளமாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு சுவடுகள் இல்லாமல் அந்த பகுதி மாறி உள்ளது.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில் வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 500 வீடுகளில் இருந்த 1,000 பேரை மீட்கும் பணியில் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்காக தமிழ்நாட்டின் கோவை விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர்கள் புறப்பட்டுச்சென்றுள்ளன.நிலச்சரிவில் பெரியபாறைகள் அடித்துவரப்பட்டுள்ளன.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறையை  9656938689, 8086010833 ஆகிய எண்கள் மூலம் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.,தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சிக்கி இருப்பவர்களை பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர்.  

வயநாடு நிலச்சரிவு தொடர்பாக  சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை 9656938689, 8086010833 எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags : வயநாடு நிலச்சரிவு தொடர்பாக  சுகாதாரத்துறை சார்பில் கட்டுப்பாட்டு அறை 9656938689, 8086010833 எண்கள்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Share via

More stories

Logo