போதையில் லாரி அடியில் படுத்திருந்தவர் சக்கரத்தில் சிக்கி பலி

by Staff / 16-12-2023 02:02:16pm
போதையில் லாரி அடியில் படுத்திருந்தவர் சக்கரத்தில் சிக்கி பலி

பீகாரைச் சேர்ந்த அர்ஜூன் யாதவ் (35), திருப்பூர் காங்கேயம்‌ சென்னிமலையில் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி சில தினங்களுக்கு முன்பு குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது. நேற்று மின்மயானம் அருகே லாரி ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.அர்ஜூன் யாதவ் குடிபோதையில் லாரியின் அடியில் சென்று படுத்ததாக கூறப்படுகிறது. இதையறியாத லாரி ஓட்டுனர் லாரியை எடுத்து சென்றுள்ளார். லாரியின் சக்கரங்கள் அர்ஜூன் யாதவ் மீது ஏறியுள்ளது. அங்கிருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அர்ஜூன் யாதவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.  மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அர்ஜூன் யாதவ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo