ராமர் கோயிலுக்கு தங்க முலாம் பூசப்பட்ட கதவுகள்
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் தங்க முலாம் பூசிய கதவு நிறுவப்பட்டுள்ளது. மேலும் கருவறையின் மேல் தளத்தில் 12 அடி உயரம், 8 அடி அகலத்தில் இந்த கதவு நிறுவப்பட்டுள்ளதகாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் 3 நாட்களில் மேலும் பல தங்க முலாம் பூசிய கதவுகள் நிறுவப்பட உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவப்பட உள்ள 46 கதவுகளில் 42 கதவுகள் தங்க முலாம் பூசியது என தகவல் வெளியாகியுள்ளது. 42 கதவுகளும் 100 கிலோ தங்க முலாம் பூசியது என தகவல் வெளியாகியுள்ளது.
Tags :