இன்று ஆளுநர் மாளிகையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55- வது தலைமை நீதிபதியாக சுஷ்ரூத் அரவிந்த் தர்மதிகாரி பதவியேற்கிறார்.
இன்று ஆளுநர் மாளிகையில் 12.30 மணி அளவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் 55- ஆவது தலைமை நீதிபதியாக சுஷ்ரூத் அரவிந்த் தர்மதிகாரிக்கு ஆளுநர் ஆர். என். ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார் .நேற்றுடன் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி எம் .எஸ். ஸ்ரீ வஸ்தவாவுக்கு பிறகு இவர் தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார். கேரளா உயர்நீதி மன்றத்தின் நீதிபதியாக பணியாற்றிய இவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் ஆர் என் ரவி பதவி பிரமாணம் செய்து வைக்கும் இந்த நிகழ்வே அவருடைய தமிழகத்தின் இறுதி பணியாக அமைகிறது.
Tags :


















