இன்று மாலை 6:00 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி கட்ட பரப்புரை நிறைவடைகிறது
இன்று மாலை 6:00 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான இறுதி கட்ட பரப்புரை நிறைவடைகிறது. கடந்த ஒரு மாதமாக தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையில் ஓய்கிறது. தேர்தலுக்கு 48 மணி நேர அமைதி காலம் தொடங்குகிறது. இன்று 6:00 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலான பரப்புரைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது .தமிழக முழுவதும் சுமார் 5.6 கோடி வாக்காளர்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றத் தயாராகி வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 23ஆம் தேதி வியாழக்கிழமை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. மே 4 ஆம் தேதி திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
Tags :


















