தமிழக சட்டமன்றத் தேர்தல்- டாஸ்மாக் கடைகள் 21 முதல் 23 வரை விடுமுறை.

by Admin / 21-04-2026 03:03:34am
தமிழக சட்டமன்றத் தேர்தல்- டாஸ்மாக் கடைகள் 21 முதல் 23 வரை விடுமுறை.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வியாழக்கிழமை 23ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அமைதியான மற்றும் நேர்மையான வாக்குப்பதிவு உறுதி செய்ய வேண்டி ஏப்ரல் 21 முதல் 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் 21 முதல் 23 வரை விடுமுறை அளித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்று நாட்களும் டாஸ்மாக் மதுபான கடைகளும் அதனுடன் இணைந்தபார்களும் மூடப்பட்டிருக்கும். இந்த விடுமுறையானது .ஏப்ரல் 21ஆம் தேதி 22ஆம் தேதி மற்றும் 23ஆம் தேதி ஆகிய மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை அமுலில் இருக்கும். இதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் நாளான மே நாலாம் தேதி திங்கட்கிழமை அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மார்க் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டும் இல்லாது உணவு விடுதிகள் மற்றும் மதுபானக்கூடங்களுக்கும் கேளிக்கை நிலையங்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தேர்தல் விதிகளின்படி எந்த நாட்களில் மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வது அல்லது இருப்பு வைப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படும். இதனால் விதி மீறல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via
Logo