குஜராத்தில் வெள்ளத்தால் பல நூறு கிராமங்கள் நீரில் மூழ்கின

by Editor / 12-07-2022 01:32:54pm
குஜராத்தில் வெள்ளத்தால் பல நூறு கிராமங்கள் நீரில் மூழ்கின


 கடந்த ஒன்றரை மாதங்களில் மின்னல் தாக்கி 63 பேர் உயிரிழப்பு மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலுடன் தொலைபேசியில் பேசிய அமித்ஷா  வெள்ளை நிலம் விவரம் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக பிரதமர் மோடியும் குஜராத்தின் முதலமைச்சர் இடம் அனைத்து உதவிகளும் அளிக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தார். தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் நிவாரண பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன எட்டு மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு காரணமாக சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பூர்ணா மற்றும் அம்பிகா நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது கடந்த ஒன்றரை மாதங்களில் மழை மற்றும் மின்னல் தாக்கி 63 பேர் உயிரிழந்ததாக மாநில பேரிடர் முகாமை அழித்த உள்ளது.

 

Tags :

Share via