வேலியே பயிரை மேய்ந்தது.காவல் உதவி ஆய்வாளரின் பாலியல் வன் கொடுமை

தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயிலும் மாணவியை பதிமூன்று வயதிலிருந்தே பாலியல் வன்கொடுமை செய்து வந்த காவல் உதவி ஆய்வாளரை வில்லிவாக்கம் மகளிர் போலிசார் விசாரணைக்குப்பின் போக்சோ சட்டத்தில் பாண்டிய ராஜனை கைது செய்தனர்.
சென்னை கொளத்தூரைச்சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவியின் தாயார் கணவனை விட்டு மகளுடன் வசித்து வந்தநிலையில் கடந்த 2015ல் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பாண்டிய ராஜனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது .மாணவியின் தாய் வீட்டில் இல்லாத பொழுது,13 வயதிலிருந்தே சிறுமியாக இருந்த மாணவியை மிரட்டி மூன்று ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்துள்ளார்.தற்பொழுது மாணவியின் தாயார் அவரை விட்டு பிரிந்தநிலை ,மாணவி பயிலும் கல்லூரிக்கு சென்ற பாண்டியராஜன் சிறுமியாக இருந்ததை விட இப்பொழுது அழகாக இருக்கிறாய் என்று சொல்லி ,தன்னிடம் முன்பு பதிவு செய்த அந்தரங்க புகைப்படம் உள்ளதாகவும் தன் விருப்பத்திற்கு உடன்படவில்லை எனில் அவற்றை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார் .இது குறித்து மாணவி காவல் ஆணையரிடம் அளித்த புகார் அடிப்படையில் வில்லிவாக்கம் மகளிர் காவல்துறையினர் உதவி ஆய்வாளரை அழைத்த விசாரணை மேற்கொண்டதில் ,மாணவி சிறுமியாக இருக்கும் பொழுதே பல முறை மிரட்டி பாலியல் வன் கொடுமை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதனை அடுத்து அவரை வில்லிவாக்கம் மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்படி கைது செய்தனர்.
Tags :