கூடங்குளம் போராட்டம்:நிதி கொடுப்பதில் கொலை முயற்சி 18 பேருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை. 

by Editor / 22-07-2023 12:01:58am
கூடங்குளம் போராட்டம்:நிதி கொடுப்பதில் கொலை முயற்சி 18 பேருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை. 

 நெல்லைமாவட்டம் இடிந்தகரை கடற்கரை கிராமத்தில் கூடங்குளம் அணு உலை போராட்டத்திற்காக மீன்பிடிப்பதில் வரும் பணத்தில் பங்கு கொடுப்பது தொடர்பாக இடிந்தகரையை சேர்ந்த இளங்கோ மற்றும் பிரைட்டன் ஆகிய இருவரையும் அதே பகுதியைச் சேர்ந்த ஜோதி, ரோசாரி, லூர்து மைக்கேல், போர்ஜின், அசாருதீன், ராபர்ட், சேகர், பிரவீன், ரமேஷ், கவுசானல், கௌதம், சீலன், சகாயம், ஞானபிரகாசி, ஆஷா, சிங், ரவி, ராணி, சூர்யா, உதயகுமார், புஷ்பராயன், ஜேசுராஜன் ஆகியோர் கடந்த 2013 -ம் ஆண்டு தாக்கி காயம் ஏற்படுத்தி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து இளங்கோ, பிரைட்டன் ஆகிய இருவரும் கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் கூடங்குளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து இவ்வழக்கில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை வள்ளியூர் சார்ப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  21.07.2023- ம் தேதி  இவ்வழக்கை விசாரித்த வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி திருமதி. பர்சத் பேகம் அவர்கள் எதிரிகளான ஜோதி, ரோசாரி, லூர்து மைக்கேல், போர்ஜின், அசாருதீன், ராபர்ட், சேகர், பிரவீன், ரமேஷ், கவுசானல், கௌதம், சீலன், சகாயம், ஞானபிரகாசி, ஆஷா, சிங், ரவி, சூர்யா ஆகிய 18 பேருக்கு 7 வருடம் சிறை தண்டனையும், தலா ரூபாய் 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் திறம்பட புலன் விசாரணை செய்து சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி எதிரிகளுக்கு தண்டனை பெற்று கொடுத்த கூடங்குளம் காவல் துறையினரை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  சிலம்பரசன்   வெகுவாக பாராட்டினார்.

கூடங்குளம் போராட்டம்:நிதி கொடுப்பதில் கொலை முயற்சி 18 பேருக்கு 7 வருடங்கள் சிறை தண்டனை. 
 

Tags :

Share via