ராமதாஸ் தன்னை தலைவர் என்று அறிவித்துக் கொண்டது கட்சிவிதிகளுக்குட்பட்டதன்று-அன்புமணி ராமதாஸ்
பா.ம.க பெயர் , சின்னத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நீதிமன்ற பதிலளிக்க உத்தரவிட்டது. அதன்காரணமாக, அன்பு மணி ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.அம்மனுவில், ராமதாஸுக்கு 87 வயதாகி விட்டதாலும், மருத்துவக் காரணங்களாலும் அவரால் நிர்வாக ரீதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லாததாலும் ராமதாஸின் நிலையைப் பயன்படுத்தி சிலர் அவரைத் தவறாக வழிநடத்தி, கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகவும் பா.ம.க.வில் பொதுக்குழுவே அதிகாரம் கொண்டது என்றும் முடிவெடுக்கும் அதிகாரம் கட்சித்தலைவர் - பொதுச்செயலாளருக்கு மட்டுமே உண்டு என்றும் ராமதாஸ் தன்னைத்தானே தலைவர் என்று அறிவித்துக் கொண்டது கட்சியின் சட்ட விதிகளுக்கு உட்பட்டதன்று. எனவே, கட்சியில் உரிமை கோரி வழக்குத் தொடர அவருக்கு சட்டப்படி உரிமை இல்லை என்றும் தேர்தல் ஆணையத்திற்கு விதிகளைத் திருத்தியது குறித்து ராமதாஸ் தரப்பு முறைப்படி தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Tags :


















