ஹோலி கொண்டாட மறுத்த இளைஞர் அடித்துக்கொலை

ராஜஸ்தான் மாநிலம் டௌசா மாவட்டத்தை சேர்ந்த ஹன்சராஜ் (25) என்பவர் நூலகத்தில் படித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த அசோக், பப்லு, கலுராம் என்ற 3 பேர் ஹோலி கலர் பொடியை ஹன்சராஜ் மீது பொடியை பூச முயன்றுள்ளனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ஹன்சராஜை அந்த இளைஞர்கள் அடித்து கொன்றுள்ளனர். கொலையாளிகளை கைது செய்யவேண்டும் எனவும், உரிய இழப்பீடு தரவேண்டும் எனவும், இளைஞரின் உடலை சாலையில் வைத்து போராடி பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags :