வேன் மோதி முன்று பேர் சம்பவ இடத்திலேயே பலி

by Staff / 16-07-2023 04:15:13pm
வேன் மோதி முன்று பேர்  சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை அருகே வேன் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை பகுதியில் இன்று மதியம் வேன் ஒன்று மிகவும் வேகமாக சென்றுகொண்டிருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் பைக் ஒன்றின் மீது மோதி வேன் அருகில் இருந்த பேக்கரிக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் பைக்கில் சென்றவர் மற்றும் கடையிலிருந்த இரண்டு பேர் உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

 

Tags :

Share via

More stories