காங்கிரசுக்கு நான் பயப்படமாட்டேன் : குஷ்பு

by Staff / 28-11-2023 01:31:19pm
காங்கிரசுக்கு நான் பயப்படமாட்டேன் : குஷ்பு

அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு "சேரி" என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இதுகுறித்து பேசிய குஷ்பு, "தலித்துக்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து போராடாத காங்கிரஸ் தான், இன்று என் வீட்டை முற்றுகையிட்டு போராடியுள்ளனர். செய்யாத குற்றத்திற்கு நான் ஏன் மன்னிப்புக்கேட்ட வேண்டும். தனித்து போட்டியிட தைரியம் இல்லாதவர்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்" என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo