இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

by Admin / 17-04-2024 09:57:54am
இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. வரும் 2024 பாராளுமன்றத் தேர்தல் 19. 0 4 .2024 அன்று நடைபெறும் 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. மாலை ஆறு மணிக்கு பிறகு பொதுக்கூட்டங்கள் வாயிலாகவோ இன்ன பிற தெரு பிரச்சாரங்கள் வழியாகவோ,சமூக ஊடகங்கள் வழியாகவோ, இணையதளங்கள் வழியாகவோ பிரச்சாரங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மீறுபவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படும் என்றும் வெளியூரிலிருந்து தேர்தல் பணிக்காக வந்துள்ள பிற தொகுதியினர், இரவு விடுதி, திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் இன்று 6 மணிக்கு முன்பாக இருப்பிடத்தை காலி செய்து விட வேண்டும் என்றும்  தேர்தல் ஆணையம் அறிவுறுத்து உள்ளது.. அதனால் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தங்களுடைய இறுதி கட்ட பிரச்சாரப் பணிகளில் கொளுத்தும் வெயிலிலும் மிக உற்சாகத்தோடு மேற்கொண்டு தீவிரம் காட்டி வருகிறார்கள்.

தேர்தலை ஒட்டி இன்று 17, 18, 19 ஆகிய மூன்று நாட்களுக்கு மதுபான விற்பனையகங்கள் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் 19ஆம் தேதி அனைத்து நிறுவனங்களும் பொது விடுமுறை அளித்து வாக்களிக்கும் வாக்காளருக்கு வசதியாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் தங்கி பணி ஆற்றும் வாக்காளர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பேருந்துகளும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது..

இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது.
 

Tags :

Share via