தமிழக மக்கள் அனைவரும் அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் - முதலமைச்சர் மு. க .ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவரும் அரசின் வளர்ச்சி பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் அதன் அடிப்படையில் வளர்ச்சியை தரும் விடியலையே மீண்டும் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார் ,கடந்த 2025 ஆம் ஆண்டு அரசுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது போல 2026 ஆம் ஆண்டும் மிகப்பெரிய வெற்றியை தரும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார், உங்கள் கனவு எங்களிடம் சொல்லுங்கள் என்ற முன் முயற்சியின் மூலம் மக்கள் தங்கள் தேவைகளை வளர்ச்சி கனவுகளையும் பகிர்ந்து கொள்ள அவர் அழைப்பு கொடுத்துள்ளார் ,கடந்த ஐந்து ஆண்டுகளில் சென்னையில் 50 ஆண்டுகால வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் ; 2026 தேர்தலில் வெற்றி பெற்று மாநிலத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல திராவிட மாடல் 2.0 அரசாங்கம் அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுகாதாரம், கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி உள்ளிட்ட 14 முக்கிய துறைகளில் தமிழகத்தை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் தமிழ்நாடு 2030 தொலைநோக்கு திட்டத்தையும் அவர் விளக்கி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் இந்த கருத்துக்கள் தேர்தல் களத்தில் அரசின் சாதனைகளையும் வளர்ச்சித் திட்டங்களையும் முன்வைத்து அவர் மேற்கொண்டு வரும் பரப்புரையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது.
Tags :














.jpg)



