வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடபிரதமர் மோடி வருகை
கேரளமாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலரும் தங்களது குடும்பங்களை இழந்து வாடி வருகின்றனர். இந்த நிலையில், வயநாட்டுக்கு பிரதமர் மோடி இன்று (ஆக.10) செல்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார். நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்ய உள்ளார்பிரதமரின் இந்த பயணத்தின்போது, கேரளா ஆளுநர் ஆரிப் முகமது, முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் உடன் இருப்பார்கள். பிரதமரின் வயநாடு பயணத்தையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Tags : வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடபிரதமர் மோடி வருகை