கஞ்சா வியபாரிக்கு 10ஆண்டுகள் சிறை.1 இலட்சம் அபராதம். 

by Editor / 11-03-2023 07:54:16am
கஞ்சா வியபாரிக்கு 10ஆண்டுகள் சிறை.1 இலட்சம் அபராதம். 


ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய  குற்றவாளிக்கு மதுரை மாவட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதை பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளுக்கான முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றம் (Prl. Special Court for EC & NDPS Act Cases - Madurai) 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு - இவ்வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல்துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆத்தூர் to சேர்ந்த பூ மங்களம் செல்லும் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் அருகில் கடந்த 21.08.2019ம் வருடம் கஞ்சாவை விற்பனைக்காக சரக்கு வாகனத்தில் கடத்திய வழக்கில் வடக்கு ஆத்தூர் பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வெங்கடாசலம் (எ) வெங்கடேசன் (47) என்பவரை ஆத்தூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 294 கிலோ கஞ்சா மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேற்படி இவ்வழக்கை அப்போதைய ஆத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் புலன் விசாரணை செய்து கடந்த 17.03.2020 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.

இவ்வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் போதை பொருள் மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகளுக்கான முதன்மை அமர்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த  நீதிபதி செங்கமலசெல்வன்  (10.03.2023) அன்று குற்றவாளியான வெங்கடாசலம் (எ) வெங்கடேசன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

 

Tags :

Share via