சிஎன்ஜி எரிவாயு மூலம் இயங்கும் பேருந்து தயாரிப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த கோகுல்நாத் என்பவர், 25 ஆண்டுகளுக்கு மேலாக பேருந்து சேவை தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர், பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனத்திடம் பேசி, சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயுவில் இயங்கும் பேருந்தை தயாரித்துள்ளார்.
இதில் டீசல் டேங்கிற்கு பதிலாக 90 லிட்டர் அளவிலான சிஎன்ஜி டேங்க் உள்ளது. மேலும், புகை மாசுவை குறைக்கும் வகையில் முற்றிலும் புகையே வெளியேறாத வகையில், இந்த பேருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கோகுல்நாத் கூறுகையில், 90 கிலோ சிஎன்ஜி கேஸ் என்பது 600 லிட்டர் டீசலுக்கு சமமானது என்றும், டீசலுக்கும் சிஎன்ஜி எரிவாயுவுக்கும் லிட்டர் அளவிலான விலையில் நாற்பது ரூபாய் வேறுபாடு உள்ளதாகவும் தெரிவித்தார்.
எரிவாயு பொருட்களின் விலை உயர்வை சமாளிக்கும் அதே நேரத்தில், இயற்கையை பாதிக்காமல் இருக்கும் இதுபோன்ற பேருந்துகள் தயாரிப்பதில் அரசு கவனம் செலுத்தினால், அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags :