நடிகர் விஜய் அரசியலுக்கு வரட்டும் பார்ப்போம்- கே எஸ் அழகிரி
நெல்லையில் நடைபெறும் நிகழ்வுக்கு வந்திருந்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் தெரிவித்ததாவது:
நடிகர் ரஜினி அரசியலுக்கு வருகிறார் வருகிறார் என சொல்லப்பட்டது ஆனால் அவர் வரவில்லை விஜய் வரட்டும் பார்ப்போம்.நீட் தேர்வு தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு வரத பிரசாதமாகவும் அவர்கள் பணத்தை வாரி குவிப்பதற்கும் உதவிகரமாக அமைந்துள்ளது.
சாதியின் பெயரால் சண்டையிட்டுக் கொள்வதை காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு செயலாக உள்ளது.காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டது அதற்கான ஆயத்த கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.
என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்தார்.
Tags : நடிகர் விஜய் அரசியலுக்கு விஜய் வரட்டும் பார்ப்போம்.


















.jpg)
