புளியங்குடியில் கைக்குழந்தையுடன் கிணற்றில்விழுந்து இளம் பெண் தற்கொலை.

தென்காசி மாவட்டம்புளியங்குடி மேற்கு பகுதியான மணக்கடையார் கோயில் செல்லும் பாதையில் மாரி பாண்டி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் இளம் பெண் கைக்குழந்தையுடன் சடலமாக மிதந்து இருப்பதாக புளியங்குடி போலீசாருக்கு தகவல் வந்தது.
அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் தலைமையில் காவல்துறையினர் மற்றும்வாசுதேவநல்லூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் மிதந்த இளம் பெண் கை குழந்தையுடன் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் இறந்த இளம் பெண் புளியங்குடி அருணாசல விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ராமசாமி மனைவி வெண்ணிலா வயது 28 குழந்தை முகில் பத்து மாசம் என்பது தெரியவந்தது தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கான காரணம் விசாரித்தபோது இருவருக்கும் கணவன் மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் மன உளைச்சலில் பத்து மாத கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : புளியங்குடியில் கைக்குழந்தையுடன் கிணற்றில்விழுந்து இளம் பெண் தற்கொலை*