புரதச்சத்து நிறைந்த வரகு அரிசி கேரட் சாதம்

by Staff / 19-04-2022 04:28:19pm
புரதச்சத்து நிறைந்த வரகு அரிசி கேரட் சாதம்

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தினமும் அல்லது இரு நாளைக்கு ஒரு முறையாவது சாப்பிடும் நபர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வருகிறது.

புரதச்சத்து நிறைந்த வரகு அரிசி கேரட் சாதம்

தேவையான பொருட்கள் :

கேரட் - 2
 உதிரியாக வடித்த வரகு அரிசி சாதம் - 1 கப்
வெங்காயம் - 1
கடுகு - அரை ஸ்பூன்
எண்ணெய் - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
முந்திரி - தேவையான அளவு
கறிவேப்பிலை - சிறிதளவு (வெட்டியது)
கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை :

கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும்.

வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், உப்பு சேர்த்து வதக்கி மூடி வைத்து வேக விடவும்.

அடுத்து அதில் உதிரியாக வடித்த வரகு அரிசி சாதத்தை போட்டு கிளறி அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி போட்டு 5 நிமிடங்கள் வைத்திருந்து கொத்தமல்லி தழை தூவி இறக்கி பரிமாறவும்.

 

Tags :

Share via