நாய் கடி சிகிச்சை அளிக்க தேவையான ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசிகள் போதிய அளவில் இருப்பதை மருத்துவமனைகள் உறுதி செய்ய வேண்டும்
நாய் கடி மற்றும் விலங்குகள் கடித்தால் சிகிச்சை அளிக்க தேவையான ஆன்ட்டி ரேபிஸ் தடுப்பூசிகள் மற்றும் ரேபிஸ் இம்யூ நோ குல புலி ஆகியவை எப்பொழுதும் போதிய அளவில் இருப்பதை மருத்துவமனைகள் , மருத்துவக் கல்லூரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்தவிதமான தாமதமும் இருக்கக்கூடாது என்றும் மருந்துகள் இல்லை என்ற காரணத்தை கூறி நோயாளிகளை திருப்பி அனுப்பக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேபிஸ் நோயின் தீவிரத்தை கருத்தில் கொண்டு தடுப்பூசி போடுவதின் அவசியம் குறித்து மக்களு க்கு விழிப்புணர்வுஏற்படுத்த வேண்டும் என்றும் என் .எம் .சி வலியுறுத்தி உள்ளது.
Tags :


















