தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

by Staff / 01-10-2023 12:58:38pm
தேடப்பட்ட தீவிரவாதி சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் கராச்சியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி கெய்சர் ஃபரூக் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பா (LeT) என்ற பயங்கரவாத அமைப்பின் தேடப்பட்ட பயங்கரவாதி அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது எப்போது எங்கு நடந்தது என்ற விவரம் ஏதும் தெரியவில்லை. கெய்சர் ஃபரூக் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா (LeT) அமைப்பில் முக்கிய பொறுப்பில் இருந்தார். மும்பை 26/11 தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர் தலைவர் ஹபீஸ் சயீத்ரே, கெய்சர் ஃபரூக்கின் நெருங்கிய நண்பர் ஆவார்.

 

Tags :

Share via