மூச்சு திணறி தூக்கத்திலேயே தந்தை, மகன்கள் மரணம்

சென்னையில் புழல் அருகே லாரி ஓட்டுநர் செல்வராஜ் (55), அவரது இரு மகன்கள் தூக்கத்திலேயே உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரவு ரூமுக்குள் தூங்கச் சென்ற மூவரும், காலை நீண்ட நேரமாக வெளியே வராததால் சந்தேகமடைந்த செல்வராஜின் மனைவி அறையை திறந்து பார்த்துள்ளார். அப்போது மூவரும் வாயில் நுரை தள்ளியபடி இருந்துள்ளனர். ரூமுக்குள் ஜெனரேட்டர் ஓடியதால், அதிலிருந்து வெளியேறிய கார்பன் மோனாக்சைடு நுரையீரலை பாதித்ததில் மூவரும் மூச்சு திணறி இறந்தது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
Tags :