தமிழக கேரளா எல்லையில் போட்டோ சூட் நடத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

by Editor / 03-07-2025 03:35:41pm
தமிழக கேரளா எல்லையில் போட்டோ சூட் நடத்திய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தென்காசி மாவட்டத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை காலம். சீசன் காலம் காரணமாக இங்கு உள்ள அருவிகளில் நீராடுவதற்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் திரண்டு வந்த வண்ணம் உள்ளனர். மேலும் குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள அருவிகளில் நீராட செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது. இந் நிலையில் தமிழக முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  புளியரை பகுதியில் இயற்கையில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் தனது ஆதரவாளகளோடும் சுற்றுலா பயணிகளோடும் புகைப்படம் எடுத்துக் கொண்டு போட்டோ சூட் நடத்தினார் ,இதன் காரணமாக அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது அனைவரும் அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர் .

 

Tags :

Share via