ஆன்லைன் சூதாட்டம்.. தந்தையை குத்திக்கொன்ற மகன்

தெலங்கானா: ரங்காரெட்டியை சேர்ந்தவர் ரவீந்தர், இவர் தனது தந்தையிடம் ரூ.6 லட்சம் கடனாக பெற்று ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்துள்ளார். இந்நிலையில், அவரது தந்தை பணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த ரவீந்தர், நண்பர்கள் பணம் தருவதாக கூறி தந்தையை அழைத்து சென்று குத்தி கொன்றுள்ளார். பின்னர், இதை தற்கொலை என தாயாரையும் நம்ப வைத்துள்ளார். அனால், சந்தேகமடைந்த உறவினர்கள் விசாரித்ததில் ரவீந்தர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து, ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Tags :