சென்னை நகரம் முழுவதும் காற்றின் தரக் குறியீடு 300க்கு மேல் பதிவாகியுள்ளது
: சென்னையில் போகி பண்டிகை காரணமாக பழைய பொருட்களை எரித்ததால் காற்று தரம் குறைந்து மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது m பிளாஸ்டிக், டயர் போன்றவற்றை எரிப்பதால் அடர்ந்த புகை எழுந்து விமான போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளதோடு பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் போகிப் பண்டிகை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது... பழைய பொருட்களை எரிப்பதனால் ஏற்படும் புகையால் சென்னை முழுவதும் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அடர்ந்த புகை மற்றும் காரணமாக விமானங்கள் புறப்படுவதிலும் வருவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. .இது போன்ற செயல்களால் கண்கள் எரிச்சல் சுவாசக் கோளாறு போன்ற உடல்நிலை பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. அதனால் பிளாஸ்டிக் டயர் ரப்பர் போன்றவற்றை எரிப்பதை தவிர்க்குமாறு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பல ஆண்டுகளாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது... சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையில் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என்றும் பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மாசுக்கட்டுப்பாடு வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.. சென்னை நகரம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து காணப்படுகின்றது.
காற்றின் தரக் குறியீடு 300க்கு மேல் பதிவாகியுள்ளது குறிப்பாக சில பகுதிகளில் 400 தாண்டி உள்ளது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்படுகிறது சுவாசக் கோளாறு காரணமாக குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Tags :


















