டாஸ்மாக் ஊழல் சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை .

by Editor / 16-05-2025 11:14:56pm
டாஸ்மாக் ஊழல் சென்னையில் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை .

டாஸ்மாக் ஊழல் தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மணப்பாக்கம் சி.ஆர்.புரத்தில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீடு, சூளைமேட்டில் உள்ள SNJ அலுவலகம்,. திருவல்லிக்கேணியில் உள்ள தொழிலதிபர் தேவக்குமார் வீடு, பெசண்ட் நகரில் மின்வாரிய ஒப்பந்ததாரர் ராஜேஷ்குமார் வீடு,. தேனாம்பேட்டையில் உள்ள டான் பிக்சர்ஸ் உரிமையாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, டாஸ்மாக் மேலாளர் சங்கீதா வீடு, டாஸ்மாக் மேலாளர் ராமதுரை முருகன் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்றது.

காலையில் இருந்து அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகனை காரில் அழைத்துச் சென்றனர்.டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகனிடம்,  அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 மணி நேரமாக நடத்திய விசாரணை நிறைவுபெற்றது.

 

Tags : டாஸ்மாக் ஊழல்

Share via