குடியரசு தலைவரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் வராதது அரசு ப்ளூ புக் விதிகளை மீறிய செயல்
குடியரசு தலைவர் திரோபதி முர்மூ டார்ஜிலிங் மாவட்டத்தில் நடைபெற்ற ஒன்பதாவது சர்வதேச சந்தால் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்தார். அவரை வரவேற்க முதலமைச்சரோ அல்லது மாநில அமைச்சர்களோ வராது உள்ளிட்ட பல்வேறு நெறிமுறை மீறல்கள் குறித்து மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது . குடியரசு தலைவருக்கு தகுந்த வரவேற்பு அளிக்கப்படாதது மற்றும் கடைசி நேரத்தில் நிகழ்ச்சி நடைபெறும் இடம் மாற்றப்பட்டது குறித்து தனது வருத்தத்தை பதிவு செய்திருந்தார். குடியரசு தலைவரை வரவேற்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் அமைச்சர்கள் வராதது அரசு ப்ளூ புக் விதிகளை மீறிய செயலென கூறி இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மேற்குவங்க தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை செயலாளர் கோவிந்து மோகன் உத்தரவிட்டு உள்ளார். குடியரசு தலைவரை வரவேற்க சிலிகுறி மேயர் மட்டுமே வந்திருந்தது நெறிமுறை மீறலாக கருதப்படுகிறது குடியரசு தலைவருக்காக அமைக்கப்பட்டிருந்த கழிவறையில் தண்ணீர் வசதி இல்லை என்றும் அவர் பயணித்த பாதையில் குப்பைகள் அகற்றப்படவில்லை என்றும் போகிறார்கள் எழுந்துள்ளன இந்த நிகழ்ச்சி ஒரு தனியார் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் விமான நிலையத்தில் உரிய அதிகாரிகள் அவரை வரவேற்றனர் என்றும் முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார் மேலும் அந்த நேரத்தில் தான் தர்ணா போராட்டத்தில் இருந்ததால் நேரில் வர இயலவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இந்த சம்பவம் மேற்குவங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பெரிய அரசியல் சரி செய்ய கிளப்பியுள்ளது.
Tags :


















