ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

by Editor / 27-04-2025 02:36:51pm
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.லஷ்கா்- ஏ- தொய்பா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் ஹுசைன் தோகெர், ஸாகிர் அஹ்மத் கானாய், ஆமிர் அஹ்மத் தார், ஆசிஃப் ஷேக், ஷாஹித் அஹ்மத் குட்டே, ஆஹ்சன் உல் ஹக் ஆமிர், ஜெய்ஷ்-இ-முஹம்மத்தை சேர்ந்த ஆமிர் நஸீர் வானி, ஜமீல் அஹ்மத் ஷேர் கோஜ்ரி, போராளிகள் முன்னணி(தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்) இயக்கத்தைச் சேர்ந்த அத்னான் சஃபி தார் மற்றும் ஃபரூக் அஹ்மத் தெத்வா ஆகியோரின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டிருப்பதாக கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

 

Tags : ஜம்மு-காஷ்மீரில் 10 பயங்கரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

Share via