விமான விபத்து.. பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை

குஜராத்: அகமதாபாத்தில், ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்ட ஆலோசனை நடத்தி வருகிறார். விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் ஆய்வு செய்தபின் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இந்த ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார். “இதயத்தை உடைக்கும் வகையில் பல உயிர்களை இழந்தது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது” என மோடி வருத்தம் தெரிவித்துள்ளார். முன்னதாக, விபத்தில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
Tags :