சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 255 ஆவது பிறந்த தினத்தில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட்.

by Staff / 31-05-2024 01:55:56pm
சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவன் 255 ஆவது பிறந்த தினத்தில் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை சஸ்பெண்ட்.

தீரம் மிக்க வீரன் வெள்ளையத் தேவனை வீரபாண்டிய கட்டபொம்மன் தன் தளபதியாக மட்டுமல்லாமல் மகனாகவும் நினைத்துப் போற்றினார். வெள்ளையர்கள் வீரபாண்டியரிடம் கப்பம் கேட்டு வந்தபோது முதலில் சீறிப் பாய்ந்தது வெள்ளையத்தேவன்தான். பானர்மேன் என்ற ஆங்கிலத் தளபதி பாஞ்சாலங்குறிச்சியைக் கைப்பற்றும் நோக்கத்தோடு படையெடுத்து வந்தான். போர் தொடங்கியது. வெள்ளையத்தேவன் சுழன்று சுழன்று ஆங்கிலேயர்களை வேட்டையாடிக் கொன்றான். கோட்டையை பலமாக காவல் காத்தான். 

இவனது வீர  ஆவேசத் தாக்குதலைக் கண்ட தளபதி பானர்மேன் போர் முடிவதாக அறிவித்துவிட்டுப் பாசறைக்கு திரும்பினர். போர் முடிந்து விட்டது என்று நினைத்து கோட்டையின் மீது நின்று தன் படைகளுக்குக் கட்டளை இட்டுக் கொண்டிருந்த வெள்ளையத் தேவனை ஒரு ஆங்கிலச் சிப்பாய் போரின் நெறிமுறைகளுக்கு மாறாகச் சுட்டுவிட்டான். இதைச் சற்றும் எதிர்பாராத வெள்ளையத் தேவன் கோட்டையிலிருந்து விழுந்து மடிந்தான். வெள்ளையத் தேவனைச் சுட்டுக்கொன்றவனை அவரது மனைவி வெள்ளையம்மாள் குத்திக் கொன்றுவிட்டு வெள்ளைத் தேவனின் சாவுக்குப் பழி தீர்த்துக் கொண்டாள். 

சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் வீரத்தினை இன்றைய இளம் தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் அவருக்கு வல்லநாட்டில் ழுழுஉருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் பிறந்த நாளான மே 31ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது அதே போன்று வல்ல நாட்டில் பிறந்து காவல் துறையில் பணியில் சேர்ந்தது முதல் தனக்கென்று ஒரு முத்திரை பதித்த ஏ டி எஸ் பி யாக வலம் வரும் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிகாரியாக அனுப்பப்பட்டு வந்தார் பல்வேறு ரவுடிகளை ஆட்டங்களை அடக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலவரம் நடக்கும் பகுதிகளுக்கு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை அனுப்பினால் பிரச்சனை தீரும் என்று அன்றைய அரசும் காவல்துறையும் நம்பியது. அந்த வீரமிக்க அதிகாரி வெள்ளையத்தேவன் பிறந்த தினத்தில் பணியிலிருந்து உரிய மரியாதையோடு பிரிவு உபச்சார விழா நடத்தி வீட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்கின்ற நினைப்பில் குடும்பத்தினரும் உறவினர்களும் காத்திருந்த வேளையில் தமிழக அரசு அவரை பணி இடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via