சுட்டெரிக்கும் வெயில்.. சுருண்டு விழுந்து மாணவன் பலி..
சென்னை திருநின்றவூரில் கடும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக 12ஆம் வகுப்பு மாணவன் சக்தி சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது நண்பன் ஹரிசுதன் உடலை பார்க்கச் சென்றபோது சக்தி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி சக்தி உயிரிழந்தார். மேலும், சக்திக்கு பிறவியிலேயே வியர்வை சுரக்கும் சுரப்பிகள் வேலை செய்யாமல் இருந்ததாலும், மற்ற இணை பாதிப்புகள் இருந்ததாலும் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Tags :