முதல்வர் பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்த ஒபிஸ்

by Editor / 22-04-2021 11:41:46am
முதல்வர் பழனிசாமியை சந்தித்து நலம் விசாரித்த ஒபிஸ்

சென்னை பசுமைவழிச்சாலையில் அமைந்திருக்கும் முதல்வர் பழனிசாமி இல்லத்துக்கு இன்று காலை நேரில் சென்ற துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், முதல்வரிடம் நலம் விசாரித்தார். குடலிறக்க சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செவ்வாயன்று வீடு திரும்பிய முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அடுத்த ஓரிரு நாள்கள் ஓய்வில் இருக்குமாறு மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முதல்வா் பழனிசாமிக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், சென்னை அமைந்தகரையில் உள்ள  மருத்துவமனையில் பரிசோதனை செய்துக் கொண்டார் அப்போது, அவருக்கு குடலிறக்கம் (ஹொனியா) பிரச்னை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சைப் பெற வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தினா்.

சட்டப் பேரவைத் தோதல் நடைபெற்றதால் அப்போது அவா் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில், வாக்குப் பதிவு நிறைவடைந்ததால்  மருத்துவமனையில் முதல்வா் கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு லேப்ரோஸ்கோபி முறையில் குடலிறக்க சிகிச்சைகள் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து முதல்வா் ஒரு நாள் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டார் அதில் அவரது உடல் நிலை சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை அவா் மருத்துவமனையில் இருந்து பசுமைவழிச்சாலையில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று ஓய்வில் இருக்கிறார்.

Tags :

Share via