பாடாய்படுத்திய பாம்புக்கள்

by Editor / 12-02-2023 09:01:20am
பாடாய்படுத்திய பாம்புக்கள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் ஒரு வழக்கு தொடர்பாக ஏராளமான வழக்கறிஞர்கள் போலீசார் மற்றும் பத்திரிகையாளர் கூடியிருந்தனர் அப்பொழுது  செங்கோட்டை தீயணைப்புத் துறையினர் வேகமாக நீதிமன்ற பகுதிக்குள் விரைந்து வந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் வாகன நிறுத்தும் இடத்தின் மேற்கூறையில் பதுங்கி இருந்த பாம்பை பிடிக்க முயற்சி செய்தனர்.

 ஆனால், பாம்பானது மேற்கூறை யிலிருந்து கீழே தாவி நீதிமன்ற வாளாகத்திற்குள் அங்குமிங்கும் சென்றதால் அங்கு பாதுகாப்புக்காக நின்று கொண்டிருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மற்றும் பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் என பல்வேறு தரப்பினரும் பயந்து அங்கு மிங்குமாக தெறித்து ஓடினர்.

 அதனைத் தொடர்ந்து, பாம்பானது மோட்டார் சைக்கிளுக்குள் உள்ளே புகுந்தது. தற்போது அந்த பாம்பை பிடிக்கும் முயற்சியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு இருசக்கர வாகனத்தில் வயரிங் கிட் உள்ள பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் பாதுகாப்பாக வனப்பகுதியில் கொண்டு விட்டனர்.

சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவிலாங்குளத்தைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். சிறை காவலர். இவரது குழந்தைகள் நேற்று பள்ளி செல்வதற்காக புறப்பட்டு ஷூ மாட்டுவதற்காக அதனை எடுத்த போது ஷூவுக்குள் பாம்பு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளனர். இதனையடுத்து உறவினர்கள் வந்து பார்த்து சங்கரன்கோவிலைச் சேர்ந்த பாம்பு மீட்பாளர் பரமேஸ்வரதாசுக்கு தகவல் கொடுத்தனர்‌. விரைந்து சென்ற அவர், ஷூவுக்குள் பதுங்கி இருந்த கொம்பேறிமூக்கன் பாம்பை உயிருடன் பிடித்துச் சென்றார். குழந்தைகள் நூழிலையில் உயிர் தப்பினர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 

 

 

Tags :

Share via