இந்திய சர்வதேச கல்வி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்திய சர்வதேச கல்வி மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு மற்றும் என் ஐ எஸ் எ யூ இணைந்து நடத்தும் நிகழ்வு இது இந்நிகழ்வில் ஒரு பகுதியாக அமெரிக்க ஐரோப்பா மற்றும் ஆசிரியர் போன்ற நாடுகளைச் சேர்ந்த எட்டு சர்வதேச பல்கலைக்கழகங்களுடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டது. இந் நிகழ்வில் இப்போது திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை பகுதியில் 870 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அறிவு சார் நகரம் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் இது சர்வதேச பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் புத்தாக்க நிறுவனங்களை ஒரே இடத்தில் கொண்டு வரும் ஒரு உலகளாவிய கல்வி மையமாக விளங்கும் என்றும் இந்த அறிவுசார் நகரத்தின் முதல் கட்டமாக வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உடனடியாக தங்கள் செயல்பாடுகளை தொடங்க ஏதுவாக பிளக் அண்ட் பிளே வசதியுடன் கூடிய ஒரு லட்சம் சதுர அடி பரப்பிலான அருவி சார் கோபுரம் அமைக்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.
Tags :


















