புரதம் நிறைந்த டோஃபு சாண்ட்விச்
டோஃபு புரதங்கள் நிரம்பிய உணவுப்பொருள். மாமிசத்திற்கு மாற்றான சிறந்த சைவ உணவாகவும் இருப்பதால், சைவப் பிரியர்களுக்கு டோஃபு சத்தான உணவாகவே உள்ளது.
தேவையான பொருட்கள்
டோஃபு (உதிர்த்தது) - 1/2 கப்,
வெங்காயம் - 1,
கேரட் - 1,
குடை மிளகாய் - 1
சோள முத்துகள் - ஒரு கைப்பிடி,
சீரகம் - 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் - 1/4 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - தேவைக்கேற்ப,
கோதுமை பிரெட் துண்டுகள் - 4.
செய்முறை
கேரட், வெங்காயம், குடைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம் போட்டு பொரிந்ததும் பொடியாக அரிந்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக அரிந்த குடை மிளகாய், கேரட், சோள முத்துகள் சேர்த்து, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.
அத்துடன் உதிர்த்த டோஃபுவை சேர்த்து கிளறவும். டோஃபு ஸ்டஃபிங் ரெடி.
கலவை நன்கு ஆறியதும் பிரெட் துண்டங்களின் நடுவே வைத்து எண்ணெய் தடவிய தோசைக்கல்லில் போட்டு சுட்டு எடுக்கவும். பின்னர் சூடாக தக்காளி சாஸுடன் பரிமாறவும்.
Tags :