மீன் கோலா உருண்டை,

by Admin / 07-04-2023 10:33:05am
மீன் கோலா உருண்டை,

மீன் கோலா உருண்டை, சிறியவர் முதல் பெரியவர் வரை உண்பதற்கான ஏற்ற உணவு. கொழுப்புச் சத்து, இன்ன பிற வகையிலான பாதிப்புகளை தராத மென்மையான எளிமையாக சீரழிக்க கூடிய உணவாகும் .அந்த வகையில் மீன் வறுத்தோ பொரித்தோ குழம்பு வைத்தும் சாப்பிடுவது என்பது சாதாரணமான நடைமுறை உணவு பழக்கம். ஆட்டு இறைச்சியை எப்படி நாம் கோலா உருண்டையாக செய்து உண்ணுகிறோமோ, அதே போன்ற முறையில் மீனையும் நாம் கோலா உருண்டை போன்று உருட்டி நாம் செய்வதில் தான் குழந்தைகளும் வயதான பெரியவர்களும் மிக எளிதாக சாப்பிடும் படியாக அமையும். இதற்கு தேவையான பொருட்கள் 1/2 கிலோ மீன் அது வஞ்சரமாக இருக்கலாம் வவ்வாலாக இருக்கலாம்..

மிளகுத்தூள் ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூள் ஒரு தேக்கரண்டி முட்டை இரண்டு சோயா சாஸ் ஒரு கரண்டி சோள மாவு மூன்று கரண்டி ரொட்டி தூள் ஒரு ஐ ஒரு 50 கிராம் இஞ்சி பூண்டு விழுது இரண்டு தேக்கரண்டி பச்சை மிளகாய் 3 பெரிய வெங்காயம் ஒன்று கொத்தமல்லி தழை சிறிதளவு எண்ணெய் தேவையான அளவு உப்பு தேவையான அளவு மீனை நன்றாக கழுவி எடுத்த பின்பு மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்று கிளறிய பின்பு ஊற வைத்து இஞ்சி பூண்டு விழுதுடன் பச்சை மிளகாய் வெங்காயம் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் ஊறவைத்த மீனை சின்ன சின்னதாக வெட்டி கொள்ள வேண்டும் ஒரு பாத்திரத்தில் அந்த வெட்டப்பட்ட மீன் துண்டுகளை மிளகுத்தூள் உப்பு சோயா சாஸ் அரைத்து வைத்த விழுது எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கிளறி வைக்க வேண்டும். பின்பு அந்த இரண்டு முட்டைகளை ஒரு பாத்திரத்தில் உடைத்து விட்டு நன்றாக அடித்து கலக்க வேண்டும். அதனை மீனுடன் சேர்த்து கிளறிய பின்பு அதில் சோள மாவு நாலு ரொட்டித் துண்டு அல்லது நறுக்கிய ரொட்டி துண்டை சேர்த்து கலக்கி சிறு சிறு உருண்டைகளாக பிடித்து விட வேண்டும். இந்த மீன் உருண்டைகளை மீதம் இருக்கும் நன்றாக பொடி செய்யப்பட்ட ரொட்டி தொழில் உருட்டி எடுத்து அரை மணி நேரம் பிரிட்ஜில் வைத்து பதப்படுத்த வேண்டும் பின்னர் சார் கனமான வாணலியை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெயை ஊற்றி அது நன்றாக சூடான பின்பு இந்த மீன் உருண்டைகளை ஒவ்வொன்றாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பிறகு, அதனோடு கொத்தமல்லி தலை போன்றவற்றை கொஞ்சம் கொஞ்சமாக தூவி விட வேண்டும். இந்த மீன் உருண்டைகளை தக்காளி ஜாஸ் பச்சை மிளகாய் சாஸோடு கலந்து தொட்டு சாப்பிட்டால், அது ஒரு மாலை நேர சிற சிற்றுண்டி ஆக கூட வைத்துக் கொள்ளலாம். இல்லை, எனில் சாப்பாட்டோடு சேர்த்தும் சாப்பிடலாம் இது எளிமையாக ஜீரணமாக கூடிய மீன் உணவு என்பதால் வறுத்து பொறித்து எடுப்பதை விட வேறொரு மாதிரியாக இதை செய்து சாப்பிட்டால் சுவையும் அதிகமாக.....

மீன் கோலா உருண்டை,
 

Tags :

Share via