அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொலை வழக்கு குற்றவாளி தப்பி ஓட்டம்.

நெல்லை மாவட்டம் களக்காட்டைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் குளச்சல் பகுதியில் ஒரு கொலை வழக்கில் கைதாகி நாகர்கோவில் ஜெயிலில் இருந்து வந்தார். அவருக்கு அறுவை சிகிச்சைக்காக நேற்று பகல் 12 மணியளவில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு அவர் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது,அதனை தொடர்ந்து தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Tags : அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கொலை வழக்கு குற்றவாளி தப்பி ஓட்டம்.