மூன்றாவது நீதிபதியிடம் செல்லும் திருப்பரங்குன்றம் வழக்கு

மதுரை திருப்பரங்குன்றம் மலையில் வழிபாட்டு உரிமை தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் அனைத்து மனுக்களையும் நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்தார். ஆனால், நீதிபதி ஸ்ரீமதி இந்த தீர்ப்பில் இருந்து மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். இதையடுத்து இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி முன்பாக விசாரணைக்கு வருகிறது. மூன்றாவது நீதிபதி யார் என்பதை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முடிவு செய்வார்.
Tags :