அதிர்ச்சி: 4 மாதங்களில் 30 மனைவிகள் கொலை

by Editor / 24-06-2025 04:46:03pm
அதிர்ச்சி: 4 மாதங்களில் 30 மனைவிகள் கொலை

குடும்ப வன்முறை, வரதட்சணை கொடுமை என சமீப நாட்களாக பெண்கள் கொலை செய்யப்படுவது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 30 மனைவிகள் கணவன்மார்களால் கொலை செய்யப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட மனைவிகள் நடத்தையில் சந்தேகம் காரணமாகவும், 6 பேர் மது போதையிலும் கொலை செய்யப்பட்டுள்ளனர். மற்றவை குடும்ப பிரச்னை, வரதட்சணை கொடுமை காரணமாக நடந்துள்ளது.

 

Tags :

Share via