கோவில்பட்டி ரெயில்வே சிக்னல் கோளாறு தாமதமாக சென்ற ரயில்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குமாரபுரம் ரெயில்வே நிலையம் அருகே ரயில்வே சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ரயில்கள் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. கோவை - நாகர்கோவில் ரெயில் கடம்பூர் ரெயில்வே நிலையத்திலும்,காசியில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்படும் பனரஸ் ரெயில் குமராபுரம் ரயில்வே நிலையத்திலும்,ஈரோடு - செங்கோட்டை ரெயில் கோவில்பட்டி ரயில்வே நிலையத்திலும்,சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் விருதுநகர் மாவட்டம் நல்லி ரயில்வே நிலையத்திலும் நிறுத்தி வைக்கப்பட்டன.சிக்னல் சரி செய்யப்பட்ட பின்னர் ஒவ்வொரு ரயிலாக இயக்கப்பட்டன.சிக்னல் பிரச்சனை காரணமாக சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகினர்.
Tags : கோவில்பட்டி ரெயில்வே சிக்னல் கோளாறு தாமதமாக சென்ற ரயில்கள்.